சிறுவயதிலே தாயை இழந்து தவித்தேன்: 9 வயது சிறுமியிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பிரித்தானிய இளவரசர்

Topics :

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தந்தையை இழந்த சிறுமியிடம் தானும் தன்னுடைய சிறு வயதில் தாயரை இழந்ததாக உணர்ச்சிபூர்வமாக கூறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் William மற்றும் இளவரசி Kate ஆகியோர் Stratford பகுதியில் உள்ள Child Bereavement மையத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இது துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து அங்கு சென்றுள்ளனர். இந்த மையம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கும் மையமாக இருந்து வருகிறது.

அங்குள்ள குழந்தைகளிடம் சகஜமாக பேசிய இளவரசர், Aoife (9) என்ற சிறுமியிடம் பேசியுள்ளார். அப்போது அச்சிறுமியின் தந்தை சிறுமிக்கு 6 வயது இருக்கும் போது கணைய புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். இதை அச்சிறுமி மிகுந்த வருத்துடன் கூறியுள்ளார்.

அப்போது இளவரசர் உனக்கு தெரியுமா தான் தன்னுடைய அம்மாவை சிறு வயதிலே இழந்து விட்டேன். அப்போது தனக்கு 15 வயது என்றும் தன்னுடைய சகோதரனுக்கு 12 வயது என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இது குறித்து Aoife தாயார் கூறுகையில், இளவரசர் அவருடைய தாயார் பற்றி பேசும் போது தான் நம்பவில்லை. அதன் பின்னர் அவர் மிக உணர்ச்சியுடன் பேசினார். அதை கேட்ட போது தனக்கு அழுகை வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகள்

advertisement
advertisement
advertisement