கற்பழிப்பு குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.30 லட்சம் பரிசு: பொலிசார் அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் கற்பழிப்பு குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

சுவிஸின் லூசேர்ன் மாகாணத்தில் உள்ள எம்மன் நகரில் 26 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கடந்த 2015-ம் ஆண்டு மே 21-ம் திகதி மாலை நேரத்தில் சைக்கிளில் தனியாக பயணம் செய்துள்ளார்.

அப்போது, ஒற்றையடி சாலையை மறைத்த மர்ம நபர் ஒருவன் இளம்பெண்ணை தாக்கி அருகில் உள்ள ஒரு மறைவிடத்திற்கு தூக்கிச்சென்று கொடூரமாக கற்பழித்துள்ளான்.

இச்சம்பவத்தை தொடர்ந்து இளம்பெண்ணிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு கால்கள் செயலிழந்து தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

கற்பழிப்பு குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த 371 நபர்களுக்கு டி.என்.ஏ சோதனை செய்யப்பட்டது.

மேலும், அப்பகுதியை சேர்ந்த 1,863 நபர்களின் கைப்பேசி தகவல்கள் ஆராய்ப்பட்டது. ஆனால், குற்றவாளியை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் ‘கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது குற்றவாளி பெண்ணிடம் தன்னுடைய பெயர் Aron அல்லது Aaron எனக் கூறியதாக இளம்பெண் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும், நபரின் வயது 19 முதல் 25 வயதிற்குள் இருக்கும் எனவும், கருப்பு நிறத்தில் உள்ள குற்றவாளி ஜேர்மன் மொழி பேசியதாகவும் பெண் கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல்களை ஒப்பிட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிசாருக்கு உதவினால் அவருக்கு 20,000 பிராங்க்(30,21,928 இலங்கை ரூபாய்) பரிசு வழங்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகள்

advertisement
advertisement
advertisement