92 வயது தாயாரை பல்லாண்டுகளாக கொடூர கூண்டில் வைத்து கொடுமை செய்த மகன்: பதறவைக்கும் வீடியோ!

Topics :

சீனாவில் பெற்ற தாயை அவரது மகன் மற்றும் மருமகள் ஒரு கூண்டிலில் வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Guangxi மாகாணத்தைச் சேர்ந்த 92 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, அவரது மகன் மற்றும் மருமகள் ஒரு சிறிய அறையை கூண்டு போன்று செய்து அதில் கட்டாயப்படுத்தி வாழும் படி வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அதுமட்டுமின்றி அவருக்கு உடை மற்றும் உணவுகள் கூட சரிவர கொடுக்காமல் கொடுமை படுத்தி வந்துள்ளனர். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அந்த அறை கிட்டத்தட்ட 107 சதுர அடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர் படுக்கும் அறை கூட சுகாதாரமற்று இருந்துள்ளது.

இதைப்பற்றிய தகவல் அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்குச் சென்று, வயதான அந்த பெண்மணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு அவர் சரியான உடை இல்லாமல், உடல் மிகவும் மெலிந்து காணப்பட்ட சம்பவம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதால், அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்பியவுடன் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அபோது தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகள்

advertisement
advertisement
advertisement