நோக்கியா அறிமுகம் செய்யவுள்ள கைப்பேசிகளும், அவற்றின் விலைகளும்

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு நோக்கியா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது.

குறித்த கைப்பேசிகள் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டிருப்பதனால் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்நிலையில் நோக்கியா 6 எனும் கைப்பேசியானது தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலையானது 249 யூரோக்கள் ஆகும்.

அடுத்ததாக அறிமுகம் செய்யப்படவுள்ளது நோக்கியா 5 எனும் கைப்பேசி ஆகும்.

இக் கைப்பேசி 5.2 அங்குல அளவுடைதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 199 யூரோக்கள் ஆகும்.

அதனைத் தொடர்ந்து 149 யூரோக்கள் பெறுமதியான நோக்கியா 3 எனும் கைப்பேசியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில் நோக்கியா நிறுவனம் ஆரம்ப காலங்களில் அறிமுகம் செய்த Nokia 3310 எனும் கைப்பேசியும் நவீனத்துவப்படுத்தப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதனை 59 யூரோக்கள் பெறுமதியில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் மொபைல் செய்திகள்

advertisement
advertisement
advertisement