அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Tab S3

சாம்சுங் நிறுவனம் அண்மைக் காலமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது.

எனினும் தற்போது தனது புதிய டேப் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

Samsung Galaxy Tab S3 எனும் குறித்த டேப் ஆனது 9.7 அங்குல அளவுடையதும், 2048 x 1536 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் Qualcomm Snapdragon 820 SoC Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் இதன் விலை மற்றும் அறிமுகமாகும் தினம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகள்

advertisement
advertisement
advertisement