சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு! திமுகவின் ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு?

தமிழக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் அதிரடி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் திமுகவின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் என கூறப்படுகிறது.

இதே போன்று, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தில் இந்த அதிரடி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகள்

advertisement
Send Feedback
Basu
Journalist
advertisement
advertisement