சசிகலாவை சந்திக்கச் செல்லவில்லை: முதல்வர் பழனிச்சாமி அதிரடி

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இன்றைய திட்டம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

தமிழக முதல்வராக நேற்று மாலை பதவியேற்ற பழனிச்சாமி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து வாழ்து பெற பெங்களூரு செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்திக்க இன்று பெங்களூரு செல்லவில்லை, கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பழனிச்சாமி ஞாயிறு அல்லது திங்கள் அன்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவிடம் வாழ்த்து பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகள்

advertisement
Send Feedback
Basu
Journalist
advertisement
advertisement