சிரிச்சிகிட்டே ஜெயிலுக்கு போன சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை வழங்கியதும் அவர் சிறைக்குள் செல்லும்போது சிரித்துக்கொண்டே சென்றார் என அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது, இது புரட்சிதலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம். மக்களின் தெய்வான புரட்சி தலைவி அம்மா உருவாக்கிய இயக்கம்.

இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அம்மாவின் ஆசைப்படி நூறாண்டுகள் கழிந்தாலும் எங்கள் அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் தொடரும்.

தொடர்ந்து, சின்னம்மா அவர்கள் இந்த ஆட்சியை வழிநடத்துவார்கள். ஒரு பெண்ணாக அவர்கள் எத்தனை சோதனைகளை சந்தித்தாலும், அவர் முன்னேறி வருவார்.

அவர் சிறைக்கு செல்லும்போது நீங்கள் பார்த்திருப்பீர்கள், சிரித்துக்கொண்டே சிறைக்குள் சென்றார். ஏனெனில் அம்மாவின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை, சமாதியில் அவர்கள் வைத்த சபதம் நிறைவேறியுள்ளது.

மேலும், மேதகு ஆளுநர் அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகள்

advertisement
advertisement
advertisement