நீங்கள் இஞ்சி டீ பிரியரா? அதனால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

இஞ்சியை ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் இதர நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணத்தை இஞ்சி பெற்றுள்ளதால், இஞ்சி டீ ஒரு சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது.

ஆனால் எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும் அதை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அது நமக்கு நஞ்சாக மாறிவிடும்.

இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தால், அது நமது செரிமான அமைப்பை பாதித்து, வாயில் எரிச்சல், வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • நம் உடலில் அமில உற்பத்தியை அதிகரிக்க செய்து, அசிடிட்டியை உண்டாக்கும். மேலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள், இஞ்சி டீயை அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, ஹைபோகிளைசீமியா நோயை ஏற்படுத்தும்.
  • இஞ்சி டீயில் ஆஸ்பிரின் அல்லது ஐபூப்ரோஃபெனில் உள்ளதால், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கண்டிப்பாக இஞ்சி டீயை பருக கூடாது. ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பை உண்டாக்குகிறது.
  • இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால், அமைதியற்ற நிலை மற்றும் தூக்கமற்ற நிலைகள் ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் அதிகமாகி, உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • அறுவை சிகிச்சைக்கு முன்பாக அல்லது நெடுங்காலமாக இஞ்சி டீயை பருகி வருபவர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில் அதற்கு காரணம் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீயுடன் எதிர் செயலாற்றும். இதனால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில், புண் மற்றும் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், அதிகமாக இஞ்சி டீயைக் குடித்தால், பித்தநீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலி ஏற்படும். எனவே அதிகமாக இஞ்சி டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • இஞ்சி டீ குடிக்கும் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும். அதனால் எந்தளவு பருகினால் ஒருவருக்கு இரைப்பை பிரச்சனை ஏற்படும் என்பதை கணிப்பாக கூற முடியாது. எனவே அளவாக குடிப்பது நல்லது.
  • இஞ்சி பயன்படுத்துதலும் கர்ப்பமும் சர்ச்சைக்குரிய விஷயமாகும். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு இஞ்சி டீ சிறந்த மருந்தாக இருந்தாலும், வயிற்றில் உள்ள சிசுவிற்கு அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, கருச்சிதைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகள்

advertisement
advertisement
advertisement