இதை என்னால் மறக்கவே முடியாது: டோனி குறித்து உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு தலைவராக இருந்த டோனி திடீரென்று தனது தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

டோனி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்பு கிரிக்கெட் வீரர்கள் பலரும் டோனி குறித்து அவ்வப்போது தங்களுடைய கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்நிலையில் அஸ்வின் டோனி குறித்து கூறுகையில், இந்திய அணியின் தலைவராக இருந்த டோனிக்கும், தற்போது தலைவராக உள்ள கோஹ்லிக்கு வித்தியாசங்கள் இருக்கின்றன.

கோஹ்லி ஒரு தாக்குதல் மிகுந்த தலைவர், டோனி ஒரு நிதான வீரர், தலைவர் பதவியில் இருந்து டோனி விலகினாலும், அவர் தற்போது இந்திய அணியில் தொடர்ந்து விளையாட இருக்கிறார்.

அவர் ஒரு விலைமதிப்பற்ற அனுவமிக்க வீரர் என கூறியுள்ளார். அவருடைய ஆலோசனை இந்திய அணிக்கு தேவை அவர் ஒரு சாவி என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சாம்பியன் டிராபி தொடரின் போது கடைசி ஓவரில் தானும், டோனியும் கலந்துரையாடியதை தன்னால் மற்றக்க முடியாது என்றும் அது ஒரு சிறந்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகள்

advertisement
advertisement
advertisement