சசிகலாவின் உண்மை முகம்! மக்கள் அதிர்ச்சி

சசிகலாவின் உண்மை முகத்தை திரைப்படமாக எடுக்க போவதாகவும் அது மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் எனவும் இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா பல பிரபல மனிதர்களை பற்றியும் பல உண்மை சம்பவங்கள் பற்றியும் திரைப்படம் எடுத்து பல முறை பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி திரைப்படம் எடுக்க போவதாக கூறியுள்ளார்.

அப்படத்தில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்த உண்மையான உறவு என்ன என்பதை பற்றி கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி போயஸ் கார்டனில் பணிபுரியும் ஊழியர்களிடம் தாம் விசாரித்துள்ளதாகவும், இந்த படத்தில் வரும் காட்சிகள் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகள்

advertisement
Send Feedback
Raju
Journalist
advertisement
advertisement