கனடாவில் மகளை எரித்து கொன்ற தாய்! ஏன்? அதிர்ச்சி சம்பவம்

Topics :

கனடாவில் தன் மகளை காருடன் எரித்து கொன்ற தாய் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் Alberta மாகாணத்தில் வசித்து வருபவர் Laura Coward (50) இவர் தனது மகள் Amber Coward (9) உடன் வசித்து வந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

Lauraவுக்கும் அவர் கணவருக்கு விவாகரத்து ஆகி விட்டது. இந்நிலையில் கடந்த 2014 செப்டம்பரில் தனது மகள் Amberஐ காரில் அழைத்து கொண்டு Laura சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது Laura தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார். அதே தூக்க மாத்திரையை தனது 9 வயது மகள் Amberகும் அவர் கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்ட சிறுமி Amber சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த Laura தன் மகள் இறந்துவிட்டதாக கருதியுள்ளார்.

இது வெளியில் தெரிந்தால் தான் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் காருடன் Amberஐ அவர் எரித்துள்ளார்.

பினனர் இது குறித்து வெளியில் தெரியவர Laura கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையில் அவர் குற்றவாளி என தற்போது நீதிமன்றம் கூறியுள்ளது.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் அவருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் கனடா செய்திகள்

advertisement
Send Feedback
Raju
Journalist
advertisement
advertisement